காஞ்சிபுரம்: நேற்று தாக்கிய வர்தா புயலால் காஞ்சிபுரத்தில் 800 மின்கம்பம் சாய்ந்தன. 500 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 28 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரத்தில் அதிக மழையும், பாதிப்பும் இருந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இங்கு நேற்று இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.பகுதி வாரியாக மழை பெய்த விவரம் வருமாறு:காஞ்சிபுரம்: 28 செ.மீட்டர் , செங்கல்பட்டு 10 செ.மீ.,, மதுராந்தகம் ; 7 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர்; 16 செ.மீ.,, தாம்பரம் 13 செ.மீ., திருக்கழுகுன்றம் ; 8 செ.மீ.,மகாபலிபுரம்; 7 செ.மீ.,கேளம்பாக்கம்; 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன..