மும்பை:
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கை குறித்து மும்பையில் நேற்று கூடி, முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என 13 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்தமாதம் அறிவித்ததை தொடர்ந்து, இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்வதற்கு முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் என 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
13 பேர் கொண்ட குழு : மத்திய அரசின் இந்தக்குழுவுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமை வகித்தார். இந்தக்குழுவில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாயக், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சவுகான், சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நிதிஆயோக் துணைத்தலைவர் அரவிந்த், நிதிஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உயர்மட்டக் குழுவின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் நேற்று மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தில் கூடியது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பிரீபெய்டு கார்டு, டிஜிட்டல் வேலட்ஸ், போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை விரிவுபடுத்த ஒருவருடத்துக்குள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அறிக்கையை இந்தக்குழு மத்திய அரசிடம் சமர்பிக்கும்.
English summary:
Mumbai - India the necessary steps to expand the digital transaction gathered yesterday in Mumbai, Chief Ministers and officials discussed the 13-member crew. Last month, the government announced it would stop short of 500 thousand banknotes, following the advice on the necessary steps to expand the digital transaction as Chief Minister and officials organized a team of 13 people.