சென்னை: ரிசோர்சாட் 2 ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
ரிசோர்சாட் 2ஏ:
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 36 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 1.2 டன் ஆகும். காலை 10.25 மணியளவில் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 18 வதுநிமிடத்தில் செயற்கைக்கோள் விண்ணில், அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. ரிசோர்சாட்-1 மற்றும் ரிசோர்சாட் -2 செயற்கைக்கோள்கள் முறையே, 2003 மற்றும் 2012ல் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ரிசோர்சாட் - 2 ஏ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. தொலை உணர்வு செயற்கைக்கோளான ரிசோர்சாட் - 2ஏ, பூமியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளது.
English Summary:
ricorcat 2A satellite was successfully placed in the skies.