மும்பை - அமீர்கானின் 'டங்கல்' படம் 5 நாள்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
5000 திரையரங்குகளில்....:
அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த என பலதரப்பினரும் படத்தை ஆஹோ ஓஹோவென்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் 4300 திரையரங்குகளில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.
5 நாளில் ரூ.300 கோடி:
இந்நிலையில் இந்தியாவில் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் ரூ. 132.3 கோடியைத் தொட்டது. இந்நிலையில் உலகம் முழுக்க முதல் 5 நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது டங்கல். முதல் நான்கு நாள்களில் இந்தியாவில் ரூ. 132 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 76 கோடியும் அள்ளியுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் முதல் 5 நாள்களில் வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது.
சாதனை படைக்கும்:
நேற்று முன்தினம் இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடியை அள்ளியிருக்கும் டங்கல், அடுத்தச் சில நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ.200 கோடியைத் தொட்டுவிடும் நிலைமையில் உள்ளது. இதன் அடிப்படையில் வரும் வாரங்களில் பல சாதனைகளை இந்தப் படம் உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
Mumbai - Aamir Khan's' tankal film collected Rs 300 crore recorded in 5 days.