சென்னை : தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனை பற்றி தமிழக ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் : தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான முன்னுதாரணம் படைத்த ராமமோகன் ராவ் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சஸ்பெண்ட் நடவடிக்கைக்குள்ளாகி, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐ..ஏ.எஸ் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை தலைமைச் செயலாளர் பி.ராம்மோகன ராவ் வீட்டில் நடந்திருக்கின்ற வருமானவரித்துறை ரெய்டு பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. அதை விடக் கொடுமை, ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதி வழங்கும் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவியிலும் இதே ராம்மோகன ராவ் நீடித்திருந்தார் என்பது தான். ஊழல்களை ஒழிக்கும் பணியில் மிக முக்கியமான அமைப்பான “லோக் அயுக்தா” அமைப்பை அமைக்க அதிமுக அரசு இதுவரை முன்வரவில்லை. இது போன்ற சூழ்நிலையில் தலைமைச் செயலாளரின் வீட்டில் ரெய்டின் ஒரு பகுதியாக தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலேயே நடத்தப்பட்ட ரெய்டால் அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்திற்கு இருந்த மாண்பு இன்று சிதைந்து நிற்கிறது.
அங்கே ரெய்டு நடத்தப்பட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் உகந்தது அல்ல எனினும் இந்த ரெய்டின் போது மத்திய போலீஸார் (துணை ராணுவத்தினர்) பாதுகாப்பு அளித்ததன் மூலம், தமிழக காவல்துறையின் மதிப்பு, மரியாதையையும் இந்த அதிமுக ஆட்சி சீர்குலைத்து விட்டது. உயர்ந்த பொறுப்பில் இருப்போர் பணியாற்றக்கூடிய தலைமைச் செயலகத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்போடு மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
ரெய்டில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுக்கள் தமிழக அரசின் கருவூலங்களுக்கு வந்தவையா, இந்த புது ரூபாய் நோட்டுக்கள் மூலம் ஆள்வோர் குவித்து வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுக் கட்டுகள் கைமாற்றப்பட்டுள்ளதா என்ற நியாயமான சந்தேகமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் தனது மவுனத்தைக் கலைத்து பதிலளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.
ராம்மோகன ராவ் ஐ.ஏ.எஸ். மீதான ரெய்டு குறித்த தகவல்கள் அனைத்தையும் எவ்வித தாமதமும் இன்றி மாநில அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ஊழலில் தொடர்புடைய “மேல்மட்ட” தலைவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது. மாநிலத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ள இந்த சோதனைகள் குறித்து தமிழக முதல்வர் விரைந்து விரிவான அறிக்கையின் மூலம் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary:
Rama Rao, who was Chief Secretary of Tamil Nadu, home to the income tax mokana the test conducted by the Tamil Nadu government to be responsive to the DMK treasurer Stalin has urged.