புதுடில்லி : மோடி மீது ராகுல் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பா.ஜ., பிரதமர் மோடி அப்பழுக்கற்றவர் எனத் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு :
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.
புனிதமானவர் :
இந்நிலையில் இக்குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்., முக்கிய தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இதிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி மீது எவ்வித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டுகளை ராகுல் சுமத்துகிறார். பிரதமர் மோடி கங்கையைப் போல புனிதமானவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதிர்ச்சியற்ற பேச்சு :
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் தெரிவித்ததாவது: ராகுல் முதிர்ச்சியில்லாமல் பேசி வருகிறார். அவரது கருத்துக்களை நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துறவி போல..
மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: பிரதமர் மோடி, நேர்மையானவர். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஒரு துறவியை போல பாடுபட்டு வருகிறார். காங்., இல்லாத இந்தியாவுக்கான கடைசி அத்தியாயத்தை ராகுல் எழுதிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெற்றி :
இந்நிலையில் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு வாபஸ் முடிவுக்கு, மக்கள் ஆதரவுடன் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது என பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறினார்.
English summary:
NEW DELHI: BJP has denied the allegations made by Rahul on Modi, Modi would be absolutely.