புதுடில்லி : கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனையை நடத்த இந்தியா தயாராகி வருகிறது.
சோதனைக்கு தயார் :
அக்னி 5 ஏவுகணை வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் ஒடிசா மாநிலம் வீலர் தீவில் நடைபெற்று வருவதாகவும், அதன் பேட்டரி மற்றும் உள்கட்டமைப்பில் சிறு மாறுதல்கள் மட்டுமே செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி - 5 ஏவுகணையை செலுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத் தொடக்கத்திலோ ஏவப்பட வாய்ப்பிருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை குறிவைக்கும் இந்தியா :
அக்னி 1, 2 மற்றும் 3 ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையில் அக்னி 4 மற்றும் 5 ஆகியவை சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்னி 5 ஏவுகணை சோதனை 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையின் 3வது சோதனை 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் நடத்தப்பட்டுள்ளது.
சூப்பர் பவராகும் இந்தியா :
அக்னி 5 ஏவுகணை 5000 முதல் 5500 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யும் பட்சத்தில் 'சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் கிளப்' நாடுகளின் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. இதற்கு முன் அதிக தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன.
English Summary:
NEW DELHI: India is preparing to test ballistic missile Agni-5 is.