பாலசோர்: அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஒடிசா மாநிலம், வீலர் தீவிலிருந்து இன்று (டிச.,26) சோதனை செய்து பார்க்கப்பட்டது. அக்னி 5 ஏவுகணை, 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுள்ளது .அக்னி 1 (700 கி.மீ.,), அக்னி 2 (2,000 கி.மீ.,) மற்றும் அக்னி 3 (2,500 கி.மீ.,) ஏவுகணைகள் பாக்.,குக்கு எதிரான பாதுகாப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையில், அக்னி 4 (2,500 முதல் 3,500 கி.மீ.,) மற்றும் அக்னி 5 (5,500 முதல் 5,800 கி.மீ.,) சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அக்னி - 5 ஏவுகணை, 17.5 மீ., நீளமும், 2 மீ., விட்டமும் கொண்டது.
இந்த வெற்றிக்கு ஜனாதிபதி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு ஜனாதிபதி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் உள்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
English Summary:
Balasore: Agni 5 ballistic missile carrying nuclear weapons test was successful. Agni - 5 missile of the final tasks, Orissa State, from the Wheeler Island today (Dec., 26) have tested population