லக்னோ : உ.பி., முதல்வரும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவருமான அகிலேஷ் யாதவ் தந்தைக்குப் போட்டியாக 235 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.
புறக்கணிப்பு:
உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அவருக்கும், அவரது சித்தப்பாவும், உ.பி., மாநில, சமாஜ்வாதி கட்சி தலைவருமான, சிவ்பால் யாதவுக்கும், அதிகாரப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளுக்கான, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பட்டியலை, முலாயம் சிங், நேற்று முன்தினம்(டிச.,28) வெளியிட்டார். இதில், அகிலேஷின் நெருங்கிய ஆதரவாளர்களில் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அதிருப்தி:
ஆனால், கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, அகிலேஷால் நீக்கப்பட்ட, சிவ்பால் யாதவ் உள்ளிட்ட, 10 அமைச்சர்களின் பெயர்கள், பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால், மனம் நொந்துபோன அகிலேஷ், தன் இல்லத்தில், ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இதன்பின், கட்சித் தலைவர், முலாயம் சிங்கை சந்தித்து, தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து, முதல்வர், அகிலேஷ் யாதவ், அதிருப்தி தெரிவித்தார்.
சரியான போட்டி:
இந்நிலையில் முலாயம் சிங் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்கு போட்டியாக, அகிலேஷ் யாதவும், 235 வேட்பாளர்கள் அடங்கிய தனி வேட்பாளர் பட்டியலை, அதிரடியாக வெளியிட்டார். இதில் தன் ஆதரவாளர்களுக்கு அதிக இடம் ஒதுக்கியுள்ளார். இதனையடுத்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, உ.பி., அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
English summary:
Lucknow: Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav, Samajwadi Party senator from rival father released a list of 235 candidates.