அலெப்போ: சிரியாவின் அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்களிடமிருந்து முழுவதுமாக மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிரிய ராணுவம் அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போர் :
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக எழுந்த கிளர்ச்சியால், அதிபரின் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடைய, 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடித்து வந்தது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போ நகரை முழுமையாக விடுவிப்பதற்காக அதிபர் ஆதரவு படையினர், கடந்த மாதம் முதல் அங்கு கடும் சண்டையில் ஈடுபட்டனர். போரினால் அங்கிருந்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தனர்.
அலெப்போ மீட்பு :
இந்நிலையில் அலெப்போ நகரம் 6 ஆண்டுகளுக்கு பின் முழுவதும் மீட்கப்பட்டதாகவும், அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிரிய ராணுவம் அறிவித்துள்ளது. இனையடுத்து அலெப்போவில் 6 ஆண்டுகளுக்கு பின் அமைதியான சூழல் திரும்பும் என ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
English summary:
Syria's Aleppo rebels handed over to the Government of the Syrian army has completely recovered.