புதுடில்லி: விமானப் படையில் பணியாற்றுவோர், மத காரணங்களை கூறி, தாடி வளர்க்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.
2003ல் உத்தரவு:
இந்திய விமானப் படையில் பணியாற்றுவோர், மத காரணங்களை கூறி, தாடி வளர்ப்பதை அனுமதிக்க முடியாது என, 2003ல், விமானப் படை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, முகமது ஜுபைர் அன்சாரி, அப்தப் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'விமானப் படையில், எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில், பாதுகாப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன' என, கூறப்பட்டிருந்தது.
தாடி வளர்க்க அனுமதிக்க முடியாது:
முகமது ஜுபைர் அன்சாரி, அப்தப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'விமானப் படையில் பணியாற்று வோர், மத காரணங்களை அடிப்படையாக வைத்து, தாடி வளர்க்க அனுமதிக்க முடியாது. விமானப் படையின் உத்தரவு, அடிப்படை உரிமைகளை மீறிய செயல் இல்லை' என, உத்தரவிட்டனர்.
English Summary;
NEW DELHI: Air Force Staff, citing religious reasons, you can not grow a beard, "the Supreme Court said.