புதுடில்லி: பஞ்சாப் மாநிலத்திற்கு, அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம்மாநில, காங்., தலைவர், அமரீந்தர் சிங்கும், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவாலும், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் காரசாரமாக மோதியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல்:
பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில், அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2017, துவக்கத்தில், இம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பிரதான கட்சிகள், தேர்தல் பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன.
குற்றச்சாட்டு:
இந்நிலையில், முதல்வர், பிரகாஷ் சிங்கிற்கு பதிலாக, பலம் வாய்ந்த வேட்பாளரை, ஆம் ஆத்மி நிறுத்தவில்லை என்றும், ஆளும் அகாலி தளத்திற்கும், ஆம் ஆத்மிக்கும் ரகசிய கூட்டணி உள்ளதாகவும், பஞ்சாப் மாநில, காங்., தலைவர், அமரீந்தர் சிங், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் குற்றஞ்சாட்டினார்.
காரசார மோதல்:
இதற்கு, டுவிட்டரில் பதில் அளித்த, அரவிந்த் கெஜ்ரிவால், 'பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் பாதல் ஆகியோரில், நீங்கள் யாரை எதிர்த்து போட்டியிடுகிறீர்கள்' என, சூடாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த, அமரீந்தர் சிங், 'பாதல் கதை முடிந்து விட்டது. நீங்கள் எங்கு போட்டியிடுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள்; அங்கே போட்டியிடுகிறேன்' என, கூறியுள்ளார்.
கெஜ்ரிவால் பதில் அளிக்கையில், 'பஞ்சாப் தேர்தலில், நான் போட்டியிடவில்லை. பஞ்சாபில் அதிகரித்துள்ள போதை பிரச்னைக்கு எதிராக போட்டியிடுகிறோம். உங்கள் சவால், வீணாகி போனது' என்றார். இருவர் இடையிலான, ஆக்ரோஷ வாக்குவாதத்தால், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
English summary:
NEW DELHI : Punjab state, in the lead up to elections next year, the state, Cong., President, Amarinder Singh, AAP leader and Delhi Chief Minister, Arvind Kejriwal, 'Twitter' banged furiously on the social site, caused a stir.