சென்னை: இடைக்கால முதல்வரை தேர்வு செய்ய சென்னை அப்பல்லோவில் அதிமுக., எம்எல்ஏ.,க்கள் ஆலோசனை நடத்தினர்.
இடைக்கால முதல்வர்?
முதல்வர் ஜெ., தீவிர சிகிச்சையில் இருப்பதால் இடைக்கால முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள், இன்று சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். 75 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருப்பதால், முதல்வராக ஒருவர் எடுக்க வேண்டி அதிகாரங்களை வேறு யாரும் செய்ய முடியவில்லை. எனவே இடைக்கால முதல்வரை தேர்வு செய்ய, கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
அரசியல் நோக்கர்கள்:
நேற்று இரவு முதல்வரை பார்த்த கவர்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. செய்திக்குறிப்பும் வெளியிடவில்லை. ‛முதல்வர் இல்லாமல் ஒரு மாநிலம் இருக்கக் கூடாது. அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும்; எனவே கவர்னர் மூலம் இடைக்கால முதல்வர் நியமனம் அறிவுறுத்தல் வந்திருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனையடுத்து சீனீயராக உள்ள ஓ.பி.எஸ்., அல்லது சசிகலாவின் நெருங்கிய உறவினர் யாராவது தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
English Summary:
AIADMK in Apollo Chennai to choose an interim president., MLA., PES discussed.