புதுடெல்லி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்டதுபோல, 2-ம் கட்டமாக மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. இதில், கமாண்டோ அதிரடி படையினர், சிறப்பு அதிரடி படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இத்திட்டத்திற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
6 ஆயிரம் கோடியில் தளவாடங்கள் :
கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் 7 தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கமாண்டோ படையினர் மற்றும் சிறப்புப் படையினரை பயன்படுத்தி, 2-ம் கட்ட துல்லியத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது.
இதற்காக 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. 300 கோடி ரூபாய் செலவில் புதிய துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்றவை கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும், கடலோர காவல்படைக்கு என 6 புதிய விமானங்கள் வாங்கப்படவுள்ளன. எனினும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
English Summary:
NEW DELHI - Pakistan-occupied area happened like, 2nd phase accuracy to strike again, the government has drawn up a new plan. The commando Action Force, Special Action Force belonging. 6 crore for the project at a cost of sophisticated military hardware purchases are made.