சென்னை: எதிர்க்கட்சி தலைவராக செயல்படும் தனக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சிறப்பு தனி உதவியாளரை நியமிக்காதது ஏன் என, தி.மு.க., பொருளாளர்ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கு தனி உதவியாளரை அரசு நியமிக்க வேண்டும். இதில், தனி உதவியாளர் பதவியை, சிறப்பு தனி உதவியாளராக உயர்த்தி, ஆதிசேஷன்என்பவரை நியமித்தனர். கடந்த ஜூன், 17 முதல், அப்பொறுப்பில் ஆதிசேஷன் செயல்பட துவங்கினார். ஆனால், சட்டசபைக்கு வெளியே, ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்திய பிரச்னையின் போது, தலைமை செயலக பணிக்கு ஆதிசேஷனை மாற்றி, கடந்த ஆக.,22ல் சட்டசபை செயலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அதில், சட்டசபை செயலர் உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நவ.,22ல் உத்தரவிட்டது.
சட்டசபை செயலர் விளக்கம்:
இந்த சூழ்நிலையில், ஸ்டாலின், சேகர்பாபு, பொன்முடி உள்ளி்ட்டோர் இன்று தலைமை செயலகம் வந்தனர். சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம், உதவியாளர் நியமனம் எப்போது என, ஸ்டாலின் தரப்பில் கேட்கப்பட்டது. ‛விரைவில் நியமனம் செய்யப்படுவார்' என, சட்டசபை செயலர் தெரிவித்ததாக, பத்திரிகையாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
English summary:
Chennai to act as leader of the opposition, after the Madras High Court ordered, why appoint as Special Assistant to the individual, the DMK, has raised the question of stalin