திருவனந்தபுரம் - கேரளாவில் அமைச்சர்களின் உதவியாளர்கள் யாரிடமும் வெகுமதி பெறக்கூடாது என்று முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
பரிசு பெறுவதாக புகார்:
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. இவரது அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் உதவியாளர்கள், அமைச்சர்களை சந்திக்க வருவோரிடம் இருந்து வெகுமதி பெறுவதாகவும், சிலர் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பரிசாக பெற்றுக் கொள்வதாகவும் முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார்கள் வந்தன.புகார்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து பினராயி விஜயன், அனைத்து அமைச்சர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், கூறப்பட்டிருப்பதாவது:-
முதல்வர் சுற்றறிக்கை:
கேரள அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களின் உதவியாளர்கள், பி.ஏ.க்கள் யாரும் அமைச்சர்களை சந்திக்க வரும் யாரிடமும் கைநீட்டக் கூடாது. அவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அது உதவியாளருக்கு வழங்கப்பட்ட வெகுமதியாகவே கருதப்படும். மேலும் ஒரு அமைச்சரின் உதவியாளர், இன்னொரு துறையில் எக்காரணமும் கொண்டும் தலையிடக் கூடாது.
அமைச்சர் - உதவியாளர்களுக்கு உத்தரவு:
அரசு துறைகளின் முடிவுகளில் அரசியலுக்காகவோ அல்லது தனிநபருக்காகவோ எந்த சலுகையும், யாருக்கும் காட்டக்கூடாது. யாருக்கேனும் இவ்வாறு செய்தால், அதனை சந்தேக கண்கொண்டுதான் பார்க்க தோன்றும். சந்தேகமே ஒரு நோயாக மாறி விடக்கூடாது. அமைச்சர்களை சந்திக்க வருவோரிடம், உதவியாளர்கள் பொறுமையுடன் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். அமைச்சர்களும், தங்களின் பார்வைக்கு வரும் கோப்புகளை உடனுக்குடன் பார்வையிட்டு அனுப்ப வேண்டும். எந்த நிலையிலும் கோப்புகள் தேங்கக்கூடாது. விரைவாக முடிவுகள் எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
English Summary:
Thiruvananthapuram - Kerala Chief Minister Pinarayi Vijayan's aides ordered anyone would receive the reward.