சென்னை : மணிக்கு 140 கி.மீ வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது 'வர்தா' அதிதீவிர புயல். புயல் காரணமாக தமிழக அரசு எடுத்து போர்கால நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. பலத்த காற்று காரணமாக முறிந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டன.
22 ஆண்டுகளுக்கு பிறகு...
வர்தா புயல் காரணமாக, சென்னையில் 192 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும், 22 ஆண்டுகளுக்கு பிறகு, இதுபோன்ற மோசமான புயலை சென்னை சந்தித்திருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
முதல்வர் வேண்டுகோள்
முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வர்தா புயல் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.
புயலின் கோர தாண்டவம்
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, 4 நாட்களுக்கு முன்பு வர்தா புயலாக உருமாறியது. தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கிய இந்த புயல், பின்னர் அதிதீவிர புயலாக மாறியது. இந்த வர்தா புயல் கரையை நெருங்க, நெருங்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் லேசான காற்றும், மழையும் தொடங்கியது. திங்கள்கிழமை காலையில் காற்றின் வேகமும், மழையும் மேலும் அதிகமானது.
மரங்கள் சாய்ந்தன...
நேற்று 12 மணி அளவில் உச்சநிலையை அடைந்த வர்தா புயல் நகரின் பல்வேறு பகுதிகளில் சூரைக்காற்றுடன் பேயாட்டம் ஆடியது. கனமழையம் கொட்டித் தீர்த்து. அதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பெயர்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டனர். அவர்கள் அறுவை இயந்திரங்கள் மூலமாக அறுத்து, ஜேசிபி இந்திரங்கள் மூலமாக அகற்றி, உடனடியாக சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.
வீடுகளிலேயே முடங்கிய மக்கள்
இந்த புயல் உருவான உடனேயே அரசின் வருவாய்த்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, போதிய மீட்புக் குழுக்களை ஏற்படுத்தவும், தேசிய பேரிடர் மீட்பு படைகளைத் அழைத்து தயார் நிலையில் நிறுத்தவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவை வழங்க உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தியது.
அதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் கூட, அந்தந்த மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் முடுக்கி விடப்பட்டனர். அரசும், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று முன்கூட்டியே அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. நீண்ட நேரம் கெடாமலிருக்கும் உணவுகளை சமைத்து வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களும் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் காரணமாக, புயல் சென்னையை புரட்டிப் போட்ட நிலையில், மக்கள் வீடுகளிலே முடங்கி, நிம்மதியாக இருந்தனர். முன்கூட்டியே பொதுமக்கள் காய்கறிகள், பால், கேன் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டிய வாங்கி இருப்பில் வைத்துக்கொண்டனர். இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
கரையை கடந்தது
"அதிதீவிர வர்தா புயல் சென்னை அருகே மாலை 3 மணியில் இருந்து 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருந்தது. வர்தா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தொடரும். காற்றின் வேகம் மணிக்கு 60-ல் இருந்து 70 கிலோமீட்டராக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆய்வு
சென்னையில் 30 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவு வழங்கப்பட்டது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை செயலர் க.பணீந்திரரெட்டி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மேற்பார்வை அலுவலர் காக்கர்லா உஷா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முகாம்களில் மக்கள்...
வர்தா புயல் காரணமாக, கடலோர பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ள மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்ட போதும் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அடையாறு , திருவான்மியூர் மீனவர்கள் உள்ளூர் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, போர்வைகள் அளிக்கப்பட்டன. மாநில அமைச்சர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்று மக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தனர்.
மின் விநியோகம் தடை
வர்தா புயல் ஏற்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சூரிய வெளிச்சமும் இல்லாததால் பகலிலேயே சென்னை நகரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கன மழை கொட்டியது. காற்றும் வேகமாக வீசியது. இதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. இதனால், இருள் சூழ்ந்தது. பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன.
காற்றுடன் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதியில் இருந்த பல மின் இணைப்பு பெட்டிகள் நீரில் மூழ்கின. மின் அதிகாரிகள் அதை உடனடியாக கண்டறிந்து மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் தேங்கி நின்ற நீரை அப்புறப்படுத்தி சரி செய்தனர். பல இடங்களில் மின் மாற்றிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனாலும் மின் விநியோகம் தடைபட்டது.
மீட்புபணி தீவிரம்
வர்தா புயல் தாக்கத்தால் இதுவரை தமிழகத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பத்திரமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 8008 பேர் அரசின் 95 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 10,754 உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. மீட்பு பணிக்காக 6 தேசிய பேரிடர் மீட்பு குழுவும், ராணுவமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
பேருந்துகள் இயக்கம்
வர்தா புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நேற்று இரவு 7 மணி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன. புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வர்தா புயலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. புயல் கரையை கடந்துவிட்டதையடுத்து நேற்று இரவு 7 மணி முதல் மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
3 மாவட்டங்களுக்கு விடுமுறை
வர்தா புயல் கரையை கடந்துள்ள நிலையில், தொடரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை
வர்தா புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை சாலை பகுதிகளில் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.. அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. வருவாய் துறையினர், பேரிடர் நிர்வாகத்துறை அதிகாரிகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தகவல் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டன. சாலைகளில் மிக குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றன. புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருந்தது.
English Summary : At a speed of 140 km per hour crossed the coast near Chennai "varta" extreme storm.
Chennai: Chennai, near the border crossing at a speed of 140 km per hour, "varta" extreme storm. Due to wartime measures and precautions taken by storm by the State Government does not have a huge impact on the public. Collapsed due to heavy air traffic corrected and trees removed immediately.
After 22 years ...
Varta due to the storm, with winds of Chennai, 192 km, 22 years later, that the nation had such a bad storm Chennai Central Meteorological Center said.