சென்னை : நெருக்கடியான நேரத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டதற்காக தமிழக காவல்துறையினருக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்,
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெர்மனியில் நடைபெறும் ஆளும் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள பா.ஜனதா கட்சி சார்பில் எனது தலைமையில் 5 பேர் குழு நாளை (இன்று) செல்கிறோம். சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆக்கக்கூடாது என்று தமிழக பா. ஜனதா சார்பில் கனரக அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தது முதல் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனார். இரவு பகல் பாராமல் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீசாருக்கு பாஜ சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்து கொள்கிறேன
தற்போது மறைமுகமாக பாஜ ஆட்சி நடத்தி வருவதாக சிலர் பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை பாஜ மதிக்கிறது. பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் தற்போது அதிமுக இருப்பதாக சில கட்சிகள் கூறுகின்றனர், . அதில் உண்மையில்லை. மேலும் தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் பாஜ தலைவர்கள் யாரும் இல்லை என்று சிலர் கூறியிருக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாஜ செல்வாக்கு அதிகரித்து தான் வருகிறது. அது சமீபத்தில் நடைபெற்ற 3 தொகுதி தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு அடுத்தப்படியாக பாஜ அதிக வாக்குகளை பெற்றுள்ளதே சான்று. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
State police in tackling law and order in the time of crisis for better appreciation Tamilisai Soundarajan said,