லக்னோ - உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்புக்குப் பின்னர், உத்தரப்பிரதேசத்தில் செல்வி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கிக் கணக்கில் 104 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை அமலாக்கப்பிரிவு கண்டுபிடித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்புப் பணம் ஒழிப்புக்கும் நடவடிக்கையாக உயர் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் முறைகேடாக பதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
101 கோடிஆயிரம் ரூபாய் :
இந்நிலையில், உத்தரப்பிரதசேத்தில் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சி வங்கி கணக்கில் 104 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை அமலாப்பப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இவை, கடந்த 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் செலுத்தப்பட்டிருப்பதும், இதில், 101 கோடி ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆனந்த் குமார் கணக்கில் 43 லட்சம் :
இதே வங்கியில், மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் கணக்கில் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு ஆனந்த்குமாருக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அவரது சகோதரரின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கான ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary:
Lucknow - high-value banknotes after notification as null and void, Ms Mayawati-led Bahujan Samaj Party in Uttar Pradesh 104 crore deposited in bank accounts had been found Enforcement has created a stir in political circles. Eradication of black money, the prime minister declared the measure invalid, the high bills, and millions across the country improperly hidden money is confiscated.