சென்னை: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் நள்ளிரவு முதல் மீண்டும் துவங்கியுள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2ம் தேதி வரை கட்டண,ம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இம்மாத இறுதி வரை காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுங்கக் கட்டணத்திற்காக வாகன ஓட்டிகள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுகளையே தருவதால் போதிய சில்லரை தர முடியாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
இதனால் ஸ்வைப் செய்யும் வசதி இன்று முதல் ஏற்படுத்தப்படும் என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பு மீண்டும் துவங்கியுள்ளதால் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டும் என லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர். எனவே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை நீடிக்க வேண்டும் என அவர்களும் வலியுறுத்தினர்.
English Summary : Back to charge tolls across the country: a shortfall of retailer motorists facing problem.Vehicle Tolls charges across the country started again from midnight. 500, 1000 notes that annulled the Prime Minister announced on the 8th of November. If the problem is the cost to the tolls on December 2,..