சென்னை: அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று கூறப்படுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கு இடையே வளி மண்டல மேலடுக்கில் உருவான காற்று சுழற்சி வர்தா புயலாக மாறி, சென்னையில் கரையை கடந்தது. இதன், தொடர்ச்சியாக வளி மண்டல மேலடுக்கில் நிலவும் காற்று சுழற்சியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக குன்னூரில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது.
நீலகிரி 70 மிமீ, தாராபுரம் 50 மிமீ, பீளமேடு, போளூர், கோவை 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும். மேலும், அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் ஒரு காற்றழுத்தம் நேற்று மாலை உருவாகியுள்ளது. இது வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில் ‘அஸ்ரி’ (Asiri) என்று அழைக்கப்படும். இந்த பெயரை இலங்கை நாடு சூட்டியுள்ளது
English Summary:
Chennai Andaman pressure was back east. It is said that the storm may cross the border in the state variable. In the south of the Bay of Bengal to the south and north of the island of Sumatra Andaman overlay formed between the atmospheric air circulation becomes varta storm, Chennai crossed the border. Thus, a series of atmospheric air circulation in the overlay by the rains in the state is widespread. Coonoor to a maximum of 100 mm in the rain yesterday.