புதுடெல்லி: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதால், ஏழை, எளிய மக்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு தடை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்ைக விடுத்துள்ள.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசித்தனர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ரூபாய் நோட்டு தடை விவகாரத்தால் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சந்திக்கும் பிரச்னைகள், சிரமங்கள் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு ஆளுங்கட்சி அனுமதி மறுத்து வருவது குறித்து புகார் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
English Summary:
NEW DELHI: If the ban of high-value banknotes, poor people will face the problem of the opposition parties have decided to talk about the meeting with President Pranab Mukherjee.