புதுடில்லி : தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மற்றும் அவரது மகனுக்கு தொடர்புடைய சென்னை, பெங்களூரு , சித்தூர் உள்ளிட்ட, 12 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விரிவடையும் சோதனை :
சென்னையில் மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேகர் ரெட்டிக்கு மணல் கான்ட்ராக்ட் கிடைக்க காரணமாக இருந்தவர் ராம் மோகன் ராவ் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் சேகர் ரெட்டியுடன் ராம் மோகன் ராவிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் அவரது சென்னை வீட்டில், இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அண்ணாநகரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்கள், ராம் மோகன் ராவின் மகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. சென்னை திருவான்மியூரிலும் சோதனை நடக்கிறது.
வருமான வரித்துறையினர் சோதனை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட, 12 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ராம் மோகன் ராவின் குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் மட்டுமல்லாது அவரது உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான தொழிலதிபர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. மேலும் பல இடங்களில் இந்த சோதனை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: Tamil Nadu Chief Secretary Ram Mohan Rao and his son related, Chennai, Bangalore, Chittoor, including the Income Tax department raided 12 places are.