டாக்கா:வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.இடம் பெயர்தல் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அக்பர் இரண்டு நாள் பயணமாக நேற்று வங்கதேசம் சென்றுள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று இன்று அவரை சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே உள்ள உறவுகள் குறித்து பேசப்பட்டது.
ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடாது:
''இரு நாடுகளிடையே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அவற்றால் இரு நாடுகளின் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடாது'' என ஷேக் ஹசீனா குறிப்பிட்டார். மேலும், எல்லையின் இரு புறங்களிலும் நீர்த்தேக்கங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தியாவிற்கு வரும்படி ஷேக் ஹசீனாவுக்கு அக்பர் அழைப்பு விடுத்தார்.
பின்னர் ஷேக் ஹசீனாவின் செய்தித் தொடர்பு செயலாளர் நிருபர்களிடம் கூறுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஷேக் ஹசீனா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும், இதுதொடர்பான பயணத்திட்டத்தை இருநாட்டு அதிகாரிகளும் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
English summary:
Prime Minister Sheikh Hasina's invitation to meet him today. He spoke about the relations between the two countries.