புதுடில்லி : எதிர்க்கட்சிகளின் அமளியால் லோக்சபா முடங்கியதால் அதற்கான செலவை ஈடு செய்யும் வகையில் தனது சம்பளம் மற்றும் தினப்படியில் ஒரு பகுதியை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி., பைஜயந்த் ஜெய் பாண்டா தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் முடக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தொடர் முடக்கத்தால் ஏற்பட்ட செலவை ஈடுசெய்ய தனது சம்பளம் மற்றும் தினப்படியில் ஒரு பகுதியை திருப்பி அளிக்க உள்ளதாக பிஜூ ஜனதா தளம் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்த பிறகும் அதன் செலவை ஈடுசெய்வதற்காக எனது சம்பளம் மற்றும் தினப்படியில் ஒரு பகுதியில் திருப்பி அளிப்பதை எனது வழக்கமாக கொண்டுள்ளேன். கிட்டதட்ட 4 முதல் 5 ஆண்டுகளாக இதனை நான் செய்து வருகிறேன். பார்லி., முடக்கத்தால் வீணாகும் பெரிய அளவிலான தொகையுடன் ஒப்பிடுகையில் நான் திருப்பி அளிக்கும் தொகை ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறேன். கடந்த 16 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட அவையில் அமளி செய்ததில்லை என்றார்.
English Summary:
Uproar over the bill because of opposition to the barley., The winter session is disabled. In this case, his salary to cover the cost of the session is off and the routine is to return a portion of the Biju Janata Dal MP, said.