சாவோ பாலோ: பிரேசில், சாவோ பாலோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அம்பரோ மது தயாரிப்பு நிறுவனம், இந்து கடவுளர்களான கணேசர் மற்றும் விஷ்ணு உருவம் பொறித்த பீர் வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளதற்கு, இந்துக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்கா, நிவேடாவில் உள்ள இந்து இயக்க தலைவர் ராஜன் ஜெட், ஒரு அறிக்கையின் மூலம் கூறியுள்ளதாவது: பீர் பாட்டில்களில் இந்து கடவுளர்களின் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளது முறையற்ற செயல். இதனால், இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மனம் புண்பட்டுள்ளது.
மரியாதை குறைவான செயல்:
இந்து கடவுள்கள் கோவில்களிலும், இல்லத்திலும் இந்துக்களால் பூஜிக்கப்படுபவை. இந்நிலையில், அவற்றை இழிவுபடுத்தும் வகையில் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிடுவது மிகவும் கண்டிக்க தக்கது. கடவுளர்களை மது விற்பனைக்கு பயன்படுத்தி உள்ளது மரியாதை குறைவான செயல் ஆகும். உலகின் மிகப் பழமையான மதங்களில் முதன்மையானது இந்து மதம். வளமையான ஆன்மிக, யோக தத்துவங்களை தன்னுள் அடக்கியது. இந்நிலையில், இந்து கடவுளர்களின் உருவங்களையோ, இந்து சின்னங்களையோ சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவறாக பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு ராஜன் ஜெட் கூறி உள்ளார்.
English summary:
Sao Paulo: Brazil, Sao Paulo-based company, which operates amparo wine production, Ganesha and Vishnu Hindu god figure this thing fried beer varieties introduced, on behalf of Hindus were condemned. Regarding the United States, Nevada operating in the Hindu leader Rajan jet, a report issued by: Beer bottles printed with images of Hindu gods improper act. Thus, the mind of the Hindu religion punpattullatu