புதுடெல்லி, வங்களில் எந்த வித பண பரிவர்த்தனைக்கும் ஆதார் எண்ணை வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பயன்படுத்த வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வங்கி பரிவர்த்தனை செய்ய முடியாது நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
. வங்கிகளில் பணம் எடுக்க செல்லாமல் இருப்பத்தி நான்கு மணி நேரமும் நாம் விரும்பும் இடத்தில் பணம் எடுத்துக்கொள்ள ஏ.டி.எம். எந்திரங்கள் உதவுகின்றன. இந்த எச்திரங்களில் வங்கி கணக்கு எண்ணை பயன்படுத்தி நாம் விரும்பும் தொகையை பெற முடியும்.
ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
சுற்றறிக்கை
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில், வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் ஆதார் வழி மட்டுமே செய்ய முடியும்.
ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொறுத்த வேண்டும்.ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். வங்கிகள், வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும்.
புதிய ஏற்பாடு
வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமையாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Beginning on jan1 Aadhaar number mandatory for bank transactions, the Reserve Bank announcement.Banks will no monetary transaction as Aadhar number to be used from the 1st of January. For those who can not afford to make a bank transaction Aadhaar number of the country's central bank, the Reserve Bank said.