தீஷா: ‘‘உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டு தடையால் ஏற்பட்ட சிரமங்கள் படிப்படியாக குறைந்து, 50 நாட்களுக்கு பிறகு நிலைமை சீராகும்’’ என குஜராத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, செல்லாத பழைய நோட்டுகளை மாற்ற, நாடு முழுவதும் மக்கள் வங்கியில் வரிசை கட்டி நின்றனர். ஒரு மாதமாகியும் இன்னும் ஏடிஎம்களில் நிலை சீராகவில்லை. இந்நிலையில், குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் நேற்று நடந்த ரூ.350 கோடி பாலாடை உற்பத்தி ஆலை தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ரூபாய் நோட்டு தடை என்பது சாதாரண ஒரு முடிவல்ல என, முதல் நாளில் இருந்தே நான் கூறிக் கொண்டிருக்கிறேன். இது முற்றிலும் மாறுபட்ட முடிவு. இத்தகைய மாறுபட்ட முடிவால், பல கஷ்டங்களையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியிருக்கிறேன்.
50 நாட்களுக்கு இந்த கஷ்டங்களும், சிரமங்களும் இருக்கத்தான் செய்யும். வரும் நாட்களில் இவை இன்னும் அதிகரிக்கவும் செய்யலாம். ஆனால், 50 நாட்களுக்கு பிறகு, எனது கணக்குப்படி, நிலைமை படிப்படியாக சரியாகி சீராகும். 50 நாட்களுக்கு பிறகு நிலைமை சீராவதை நீங்களே உங்கள் கண்முன் பார்ப்பீர்கள்.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மக்களவையில் என்னை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன. அதனால்தான், மக்கள் மன்றத்தில் பேச முடிவு செய்தேன். ஆனாலும், மக்களவையில் எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், நாட்டின் 125 கோடி மக்களின் குரலை அங்கு பதிவு செய்வேன். நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் முடக்குகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பேசுவார் என அரசு உத்தரவாதம் அளித்தும் நிலைமை சீராகாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அதே நேரத்தில், நாடாளுமன்றத்தை முடக்கும் செயலால் ஜனாதிபதி கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ரூபாய் நோட்டு விஷயத்தில் விவாதம் நடத்த அரசு தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தான் பயந்து ஓடுகின்றன. ஏனென்றால் பெரும்பாலான மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். ரூபாய் நோட்டு தடை உத்தரவானது முறையாக செயல்படுத்தப் பட்டிருப்பதாகவே மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.
முதுகெலும்பை உடைத்துள்ளது: ரூபாய் நோட்டு தடை உத்தரவால், தீவிரவாதம், ஊழல், கருப்பு பணம் வேரறுக்கப்படும். இந்த உத்தரவானது, தீவிரவாதத்தின் முதுகெலும்பை உடைத்தெறிந்துள்ளது. கள்ள நோட்டுதான் தீவிரவாதத்துக்கு தீனி போட்டு வந்துள்ளது. மேலும், இது அடித்தட்டு மக்களுக்கும், நேர்மையானவர்களுக்கும் அதிகாரம் அளிக்க கூடியது. ரூபாய் நோட்டு தடையை எதிர்ப்பவர்கள் என்னை விமர்சியுங்கள், மக்கள் பிரச்னையை முன்வையுங்கள், அதே நேரத்தில், ’வங்கிமுன் நிற்க வேண்டாம், மொபைல் பேங்கிங்கை பயன்படுத்துங்கள்’ என அறிவுரையும் வழங்குங்கள். மக்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்.
புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இன்று, பணம் எடுப்பதற்காக கூட்டம் கூட்டமாக வங்கி வரிசை முன் மக்கள் நிற்கிறார்கள். இதே நீங்கள், ரொக்கமில்லா சமூகத்தை உருவாக்க எனக்கு ஆதரவளித்தால், உங்கள் மொபைல் போனில் வசதிகளை ஏற்படுத்தி தர வங்கிகள் வரிசையில் நிற்கும். ரூபாய் நோட்டு தடைக்கு பிறகும், கருப்பு பணம் பதுக்குபவர்களும், ஊழல்வாதிகளும் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள். எந்த வகையிலும் அவர்கள் தப்பி விட முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
‘வாங்க, வந்து பதில் சொல்லுங்க’:
நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகள் விடுவதில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். ‘‘உங்கள் (மோடி) உரையாடல்களை கேட்டு, கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டார்கள். நாடாளுமன்றத்தை நேர்மையுடன் எதிர்க்கொள்ளுங்கள், எங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள்’’ என டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
English summary:
Tisa: '' high-value currency note of the difficulties caused by the ban gradually declining, the situation will get better after 50 days '' at the ceremony, Prime Minister Narendra Modi expressed confidence that Gujarat.