உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது, மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கை என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அமர்த்யா சென் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை, பணத்தின் மீதான மதிப்பை குறைத்துவிட்டது. அத்துடன், இந்தியப் பொருளாதாரத்தின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குறைத்துவிட்டது. இது, மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையாகும்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய பொருளாதாரத்தின் நம்பகத் தன்மை மீதான பேரழிவாக பிரதமர் மோடியின் நடவடிக்கை அமைந்துள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தை ஆதரிக்கிறேன். ஆனால், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள், புத்திசாலித்தனமானதாகவும், மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும். பிரதமர் மோடி தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் சாதாரண மக்களும், சிறு வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவரது இந்த நடவடிக்கை குறைந்த பலனையும், அதிக பாதிப்பையும் தரக் கூடியது என்றார் அமர்த்யா சென்.
English Summary : Bill withdraws: Modi government's authoritarian behavior.High-value banknotes were withdrawn, the Modi government's authoritarian measures, Nobel Prize winner for Economics, Amartya Sen criticized the Bharat Ratna award winner.
In this regard, he said in an interview with private television,
high-value banknotes, withdrawal of action, reducing the value of money. In addition, the Indian economy has reduced the overall confidence. The Modi government's authoritarian act.