டோக்கியோ : ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
ஜப்பான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு H5 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நிகட்டா மாவட்ட பண்ணைகளில் உள்ள 3 லட்சத்து 20 ஆயிரம் கோழிகளையும், ஓமோரி மாவட்ட பண்ணைகளில் உள்ள 16 ஆயிரத்து 500 வாத்துகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி தொடங்கியது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து, கோழி மற்றும் வாத்துகளை இதர இடங்களுக்குக் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் வேறு இடங்களுக்குப் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில், இரண்டு ஆண்டுகள் கழித்து பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது தற்போதுதான் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
English Summary : Bird flu cases in Japan - decided to destroy the birds.Japan bird flu found being grown on farms with more than 3 million birds, the government decided to destroy.