புது தில்லி, ரூ.1 அளித்து முன்பதிவு செய்துகொண்டால் நிறுவன ஊழியர்கள் மூலம் வீட்டுக்கே வந்து ரூ.2000 நோட்டை அளிக்கும் புதிய முறையை "ஸ்நாப் டீல்' இணைய வர்த்தக நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ரோகித் பன்சால், தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பண நெருக்கடியால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும் நோக்கில் வீட்டிற்கே வந்து ரூ.2000 நோட்டை அளிக்கும் சேவையை தொடங்கியுள்ளோம்.
வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கிவிட்டு ரொக்கமாக அளிக்கும் தொகையை இந்த சேவைக்கு பயன்படுத்திக் கொள்வோம். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.1 மட்டுமே வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படுகிறது.
ஸ்நாப்டீல் இணையதளத்தின் மூலம் இந்த சேவையை பெற விருப்பம் தெரிவிக்கும்போது பற்று அட்டை (டெபிட் கார்டு) மூலம் 1 ரூபாயை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
அல்லது செல்லிடப்பேசிகளுக்கு ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ள பயன்படும் "ப்ரீசார்ஜ்' இணையதளத்தின் வழியாகவும் சேவைக் கட்டணத்தை செலுத்தலாம். அதன்படி, எங்களது ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லத்துக்குச் சென்று பணம் செலுத்த உதவும் ஸ்வைப் மெஷின் மூலம் உங்களது ஏடிஎம் பற்று அட்டையைப் பயன்படுத்தி ரூ.2000 நோட்டை அளிப்பார்கள். வாடிக்கையாளர்கள் ஒரு முறைக்கு ரூ.2000 மட்டுமே பெற முடியும்.
இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேறு எந்தவொரு பொருளையும் எங்களது நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள் பெற வேண்டும் என்பது கட்டாயமல்ல. இந்த சேவை தில்லி குர்காவன், பெங்களூரு ஆகிய நகரங்களில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற முக்கிய நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுப்படுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் ரோகித் பன்சால் குறிப்பிட்டுள்ளார்.
English Summary:
New Delhi, Rs 1 provides a reservation made by the company representatives to come home Rs 2,000 notes will provide a new method "Snap Deal 'Internet trading company has introduced.