சென்னை: வங்க கடலில் நிலை கொண்ட ‛நடா' புயல் காரைக்கால் - கடலூர் அருகே கரையை கடந்தது.
கடந்த இரு தினங்களாக வங்க கடலில் நிலை கொண்டு வந்தது ‛நடா' புயல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டு வந்த வறட்சியை இந்த புயல் மழை மூலம் சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை மூலம் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடனும் சாரல் மழையுடனும் காணப்பட்டது.
இந்நிலையில் சுமார் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் ‛நடா' புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. சுமார் 3 மணியளவில் காரைக்கால் - கடலூர் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது புயல் காற்றழுத்த மண்டலமாக மாறி சுமார் 40-50 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயல் கரையை கடந்த சமயம் கடலூர், வேதாரண்யம், காரைக்கால், நாகை உள்ளிட்ட பலபகுதிகளில் பலத்த காற்று வீசியது.
‛நடா' புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் சேதத்தை சீர் செய்யும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. இருந்தும் சேதங்கள் எதுவும பெரிய அளவில் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது 54 கி.மீ., வேகம் வரை காற்று வீசியதாக பதிவாகியுள்ளது.
புயல் தற்போது கரையை கடந்துள்ள நிலையில் இன்னும் 12 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி மற்றம் கேரள பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீனவர்கள் இன்னும் 12 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary : Border crossing 'Nada' storm. In the Bay of Bengal with a position 'Nada' Karaikal storm - crossed the coast near Cuddalore. The coastal districts of Tamil Nadu, most areas in the north by yesterday morning cloud spotted ...