புதுடில்லி: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால், மின்னணு வாலட்கள் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அதிரடி உயர்வு:
அரசுக்கு கிடைத்த தகவல்ப்படி, கடந்த நவம்பர் 8 ம்தேதி ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்ட போது, மின்னணு வாலட்கள் மூலம் 17 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டுவந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் முடிந்த பின்னர், இந்த வாலட்கள் மூலம் 63 லட்சம் முறை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பணப்பரிமாற்றம் 271 சதவீதம் அதிகரித்துள்ளது. பணப்பரிமாற்றம் செய்யப்படும் அளவு, 267 சதவீதம் அதிகரித்துள்ளது. தினசரி சராசரியாக ரூ.52 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது, தினமும் ரூ.191 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் உள்ளது.
நவம்பர் 8, ரூபே வாலட் மூலம், தினமும் ரூ.16 லட்சம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், 503 சதவீதம் அதிகரித்து தற்போது, ரூ.236 கோடி அளவுக்கு தினமும் பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது.
English Summary:
NEW DELHI: The Rs 500 and Rs 1,000 banknotes withdrawn originated, up to 300 percent increase in transfer payments made by electronic wallet.