திருப்பூர்: பனியன் நிறுவனங்களுக்கு வங்கியாளர்கள் நேரடியாக சென்று, தொழிலாளர்களுக்கு கணக்கு துவக்கி கொடுத்துள்ளனர். அதனால், சம்பளம் வழங்குவதில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்த பிரச்னைகள் தீர்கின்றன.
திருப்பூர் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களிலும், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என பல்வேறு வகை ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும், ஐந்து லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு, வாரம் தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. தொழிலாளர்களுக்கு சம்பளத்தொகை, கைகளில் ரொக்கமாகவே வழங்கப்பட்டுவந்தது.
பிரதமரின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, வங்கியில் பணம் பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விதிமுறைகள் தொடர்கின்றன. சம்பளத்துக்காக வங்கியிலிருந்து லட்சக்கணக்கில் தொகை பெற முடியாத சூழல் உருவானது.
ஆடை உற்பத்தி நிறுவனத்தினர், தங்கள் நிறுவனங்களுக்கு வங்கியாளர்களை அழைத்துவந்து தங்கள் தொழிலாளர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு துவக்கி வருகின்றனர்.முகாம் வாயிலாக, மாவட்டம் முழுவதும் 23,781 பேருக்கு புதிதாக வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது; 27,957 பேரின் ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன; 7,061 பேரிடமிருந்து ரூபே கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர, ஏற்றுமதியாளர் சங்கம் 11,000 தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு துவக்க விவரங்கள் சேகரித்து வங்கிகள் வசம் வழங்கியுள்ளது.
நேதாஜி அப்பேரல் பார்க் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில், சென்னையிலிருந்து தனியார் வங்கி அதிகாரிகள் முகாமிட்டு, தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு துவக்கி வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர் அதிகளவு பணிபுரியும் நிறுவனங்கள், வங்கிகளில் "ப்ரீபெய்டு' கார்டு பெற்று, வழங்கியுள்ளன.
இவ்வாறு, மொத்தம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இன்று முதல், பின்னலாடை தொழிலாளர்கள் வங்கி கணக்குகளில் சம்பள தொகை பெற உள்ளனர். அதனால், சம்பளம் வழங்குவதில் இருந்த சிக்கல்கள் விலகியுள்ளன.
மேலும், சேமிப்பு பழக்கத்தை வளர்க்கவும், சம்பளத் தொகையை வீண் செலவினங்கள் செய்வதை தவிர்த்து, தொழலாளர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மாதச்சம்பள முறைக்கு மாறுவதற்கும் தொழில் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ""மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட, முகாம் வாயிலாக, 23,781 பேருக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே தொழிலாளர் வசமிருந்த வங்கி கணக்கு விவரங்களை நிறுவனங்கள் பெற்றுள்ளன.
""இதனால், திருப்பூரில் ஒரு லட்சம் பேர், புதிதாக வங்கி பயன்பாட்டுக்குள் நுழைந்துள்ளனர். வெவ்வேறு சங்கங்கள் தரப்பில், வங்கி கணக்கு துவங்க கோரிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
""துரிதகதியில் வங்கி கணக்கு துவங்கப்பட்டுவருகிறது. எனவே, சம்பளம் வழங்குவதில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்துவரும் சிக்கல்கள் படிப்படியாக தீர்ந்து வருகின்றன,'' என்றார்.
English Summary:
Tirupur: Bunyan companies go directly to the bankers, workers have begun to account. So, in providing salary solving problems met apparel companies.