ஐதாராபாத் - பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பணத்துக்காக வங்கிகள், ஏடிஎம் கள் முன்பு மணிக்கணக்கில் தவம் கிடக்கின்றனர். இந்தப் பிரச்சினையை சமாளிக்க ரொக்கப் பண மில்லா வர்த்தக முறையை செயல் படுத்துவதற்காக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. டெபிட், கிரடிட் கார்டுகள், இணையதள பணப்பரிவர்த் தனையை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்து வருகிறது.
இதனிடையே, தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை தொகுதியில் உள்ள இப்ரஹிம்பூர் கிராமத் தில் முற்றிலும் ரொக்கப் பணமில்லா வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முதல்வர் சந்திரசேகர ராவின் உறவினரான ஹரீஷ் ராவ்தான் இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். மாநில நீர்வளத்துறை அமைச்ச ராக உள்ள இவர் இப்ரஹிம்பூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இந்தக் கிராமத்தில் மொத்தம் 370 குடும்பங்களைச் சேர்ந்த 1,200 பேர் வசிக்கின்றனர். இதில் 70 சதவீத குடும்பத்தினருக்கு ஏற்கனவே வங்கி கணக்கு இருந்து. அமைச்சர் ஹரீஷ் ராவ் தத்தெடுத்த பிறகு மீதமிருந்த அனைவருக்கும் அப்பகுதியில் உள்ள ஆந்திரா வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.
டெபிட் கார்டு மூலமாக :
பின்னர் சலவை தொழிலாளி முதல் பெட்டிக் கடை, மளிகைக் கடை ஆகிய அனைத்து கடைகளுக்கும் பாயிண்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் பொதுமக்கள் தங் களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் டெபிட் கார்டு மூலமே வாங்கிக் கொள்கின்றனர். இதனால் பணத்துக்கு அவசியமே இல்லாமல் போய்விட்டது. அடுத்தபடியாக சித்திபேட்டை தொகுதி முழுவதும் இந்த முறையை அமல்படுத்த அமைச்சர் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் படிப்படியாக மாநிலம் முழுவதும் ரொக்கப் பணமில்லா வர்த்தக முறையை அமல்படுத்த முதல்வர் சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
English summary:
hyderbad- older than 500, the federal government announced in 1000 is not valid banknotes. Thus, public money across the country, banks, ATMs, tend penance hours ago. To deal with this problem is cash Milla trading system, set up a committee headed by Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu. Debit, credit cards, web transaction to people about how to go with the committee is investigation.