சென்னை - 'வார்தா' புயல் தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் லேசான மழையும், தென் கடலோர ஆந்திரப் பகுதிகளில் கனமழை வாய்ப்பும் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது:
''வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'வார்தா' புயல், மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து தற்போது நெல்லூரில் இருந்து 880 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போது 'வார்தா' புயல் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகரும்.
12-ம் தேதி மாலை நெல்லூர்- மச்சிலிப்பட்டினம் இடையே 'வார்தா' புயல் கரையைக் கடக்கும். இதன் காரணமாக தென் கடலோர ஆந்திரப் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ம் தேதிக்குப் பிறகு 'வார்தா' புயல் வலுவிழக்கும். புயல் காரணமாக தமிழக மீனவர்கள் ஆந்திரக் கடலோரப் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்'' என்று ஸ்டெல்லா கூறியுள்ளார்.
English Summary:
Chennai - "Wardha" the intensification of storms and rain in the Tamil Nadu, south coastal Andhra regions Meteorological Centre, Chennai, said that there is possibility of rain. In this connection, the Director of the Chennai Meteorological Stella said: