தேனி: ''மின்னணு, அலைபேசி பண பரிவர்த்தனையால் நம்நாட்டில் பெரும் மாற்றம் ஏற்படும்,'' என, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் முத்துக்குமார் பேசினர்.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் 'பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம்' குறித்த கலந்துரையாடல் தேனியில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; ஆனால், கறுப்பு பணம் நம் சமுதாய புற்றுநோயாக உள்ளது. இதை குணப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் பிரதமரின் நடவடிக்கையை வரவேற்கின்றன. ஆனால், 'அமல்படுத்திய விதம் சரியில்லை' என சிலர் கூறுகின்றனர்.
கென்யா முதலிடம்:
உலகளவில் கென்யாவில், 85 சதவீதம் பேர் மின்னணு, அலைபேசி பண பரிவர்த்தனை செய்கின்றனர். இதற்கு அடுத்து உகாண்டா உள்ளது. இந்த நாடுகளில் பணத்துடன் சந்தைக்கு செல்வது இல்லை. பொருள் விலை நிர்ணயம் செய்தவுடன் அலைபேசியில் இருந்து கடைக்காரருக்கு பணம் அனுப்புகின்றனர். இணையதள, அலைபேசி பண பரிவர்த்தனைகளால் நம்நாட்டில் மின்னணு புரட்சி ஏற்படும்.
48 மணி நேர கெடு: இந்தியா போல் வேறு எந்த நாட்டிலும், இந்தளவிற்கு மதிப்பு இழந்த நோட்டுகள் மீது நடவடிக்கை எடுத்தது இல்லை. கடந்த 1978ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 சதவீத அளவில் நடவடிக்கை மேற்கொண்டார். 1986ல் பர்மாவிலும், 1991ல் ரஷ்யாவிலும் கறுப்பு பணத்தை ஒழிக்க, இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.ரஷ்யாவில், '48 மணிநேரத்தில் ரூபாய் நோட்டுகளை ஒப்படைக்காவிட்டால் செல்லாது' என அறிவித்தனர். ஆனால், இந்தியாவில் 50 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கையை ஏற்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.கலெக்டர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary:
Theni: '' electronic, mobile money transaction caused a major change in my country, '' as reported the press office of additional director Muthukuamr spoke Chennai.