சென்னை : தற்போது கரையை கடந்து வரும் வர்தா புயலின் தாக்கத்தில், சென்னை நகரமே மூழ்கப் போகிறது என ‛நாசா' எச்சரித்துள்ளதாக வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை.
வாட்ஸ்ஆப்பில் புரளி :
சென்னைக்கு அருகே வர்தா புயல் அதிவேகமாக கரையை கடந்து வருகிறது. சென்னையில் பலத்த மழையுடன், பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் ஆந்திராவில் கடலோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வர்தா புயல் கரையை கடந்து வரும் நிலையில், புயலின் தாக்கத்தால் சென்னை நகரே மூழ்க போவதாக நாசா ஆய்வு மைய அலுவலகம் எச்சரித்துள்ளதாகவும், இதனால் சென்னையில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான வேறு ஊர்களுக்கு சென்று விடுமாறும் வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று பரவி வருகிறது.
அதிகாரிகள் விளக்கம் :
மக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் எனவும், புயல் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மட்டும் தான் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
English summary:
Chennai: varta across the border of the impact of the storm, as the Chennai city is going destory. 'NASA' warned one vatsap viral spread of the hoax. This is not true.