சென்னை:
வார்தா புயல் தாக்குதலில் சின்னாபின்னமான சென்னை தற்போது மீண்டு வருகிறது. சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், #Roadscleared என்ற ஹேஷ்டேகின் மூலம் சென்னையில் சீரமைக்கப்பட்டுள்ள சாலைகளின் விபரத்தை மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. இதன்படி பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, ஆர்.கே. சாலை, சர்தார் படேல் சாலை மற்றும் லால்பகதூர் சாஸ்திரி சாலை ஆகியவை சீரமைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. 110 கிமீ வேகத்தில் தாக்கிய 'வார்தா' புயலின் கோரத்தாண்டவத்தால் சின்னாபின்னமான சென்னை, தற்போது படி படியாக மீண்டு வருகிறது.
விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள், தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரங்கள் மூலமாக மரங்களை அறுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அவற்றை அகற்றி வருகின்றனர். ஓஎம்ஆர் மற்றும் பெருங்குடியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரயில் சேவை தொடங்கப்படவில்லை. மந்தைவெளி முதல் மைலாப்பூர் வரையான அனைத்துப் பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கவில்லை. திருவான்மியூர் பேருந்து நிலையம் இன்னும் தன்னுடய இயல்புக்குத் திரும்பவில்லை. 49, 95 மற்றும் 23C ஆகிய மூன்று பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.
English summary:
Chennai: Chennai-torn Wardha Storm attack has now recovered.Roads in the trees, transport the victim to fall minkampankal condition, #Roadscleared hestek the roads through the details of the restructuring of the State Disaster Management Board in Chennai, he has been posting on his Twitter page.