சென்னை: வர்தா புயல் தாக்குதல் எதிரொலியாக மரம் மற்றும் விளம்பர பலகைகள் விழுந்தும் வீட்டின் சுவர் இடிந்தும் 10 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 2 பேரும், திருவள்ளூரில் 2 பேரும், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை புரசைவாக்கம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் ராதா(80). இவர் தனியாக வசித்து வருகிறார். வர்தா புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. ராதா வீட்டின் அருகே 80 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று வேருடன் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் வீடு இடிந்து ராதா சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பார்வதி(85). வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பார்வதி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். வடபழனி பத்தவத்சலம் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் கார்த்திக்(3). நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மரம் விழுந்ததில் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் கார்த்திக் சம்பவம் இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். உடன் விளையாடிக் கொண்டிருந்த பிரேம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜமங்கலத்தை சேர்ந்த வைகுண்டநாதன்(42). வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் அமைக்கப்பட்டிருந்த விளக்கு கம்பம் காற்றில் பெயர்ந்து விழுந்தது. இதில் சிக்கி வைகுண்டநாதன் இறந்தார். ஒரிசாவை சேர்ந்த கார்னா பகேரா (24) இவர் யானைகவுனி திருப்பள்ளி தெருவில் உள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று பணி முடிந்து வெளியே செல்லும் போது சாலையில் உள்ள மழை நீரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திரு.வி.க.நகரை சேர்ந்தவர் மணி(60). நேற்று வீட்டுக்கு செல்வதற்காக மாநகர பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகளவில் காற்று வீசியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென வலிப்பு ஏற்பட்டு பேருந்திலேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதேபோல் மீனம்பாக்கத்தை சேர்ந்தவர் அமனுல்லா(45). நேற்று மாலை ஜிஎஸ்டி சாலை வழியாக நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசு விளம்பரம் பலகை ஒன்று பறந்து வந்து அமனுல்லா மீது மோதியது. இந்த விபத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்தா புயலில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க கூடும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary:
Chennai: varta storm hit the trees and billboards echo into the wall of the house collapsed, killing 10 people. Chennai 4 persons, 2 persons in Kancheepuram, Tiruvallur 2 persons, one each died in Villupuram and Nagapattinam, the National Disaster Management Organization reports