சென்னை: முதல்வர் ஜெ., செப்.22ம் தேதி, நுரையீரலில் ஏற்பட்ட மூச்சு முட்டல் (Pulmonary edema) காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இதையடுத்து, ‛‛அவர் எப்போது விரும்பினாலும் வீடு திரும்பலாம்'' என அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்தார்.
கார்டியாக் அரெஸ்ட்: இவ்வாறு அவர் அறிவித்த சில நாட்களில், நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் பரவியது. மாரடைப்பு என்று தமிழக மக்கள் பொதுவாக சொன்னாலும், டாக்டர்கள் கூறும்போது, ‛‛இப்பிரச்னையை ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் என பிரித்து சொல்ல வேண்டும்.
ஹார்ட் அட்டாக் என்பது, இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இருதயத்திற்கு செல்ம் ரத்தத்தின் அளவு குறைந்து, இருதய துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‛‛கார்டியாக் அரெஸ்ட்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கார்டியாக் அரெஸ்ட் என்பது இருதயம் முழுமையாக செயல்பாட்டை இழந்து விடுவது என்கிறார்கள் டாக்டர்கள்.
எக்மோ கருவி:
இதுகுறித்து அப்பல்லோ டாக்டர்கள் சிலர் கூறும்போது, ‛ஜெ.,வுக்கு நுரையீரல் பிரச்னை ஏற்கனவே உள்ளது. கார்டியாக் அரெஸ்ட்டும் ஏற்பட்டுள்ளதால், எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகள், நுரையீரல் மற்றும் இருதயத்தை வெளியில் இருந்து இயக்குவது. இதைப் பொருத்தி 8 மணி நேரம் டாக்டர்கள் கண்காணித்திருக்கலாம். அவர் உடல்நிலை சீராக இருந்திருந்தால், ரத்தக் குழாய் அடைப்பு ஆஞ்சியோ மூலம் இன்று அதிகாலை சரி செய்யப்பட்டு இருக்கலாம்.
இவை எல்லாமே பொதுவாக இப்படி ஏற்படுபவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சை. முதல்வருக்கும் இப்படி செய்யப்பட்டிருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

English Summary:
Chief Minister J., On Sept. 22, abuting breath in the lungs (Pulmonary edema) due to the Apollo hospital. He was undergoing a series of treatments in health care, there was good progress. However, '' when he wants to go back home, '' Apollo hospital chief Pratap Reddy was declared.