சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று (04.12.2016) மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு இதயவியல், சுவாசயியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பல்லோ மருத்துவமனை முன்பு தமிழக மூத்த அமைச்சர்கள், டிஜிபி உட்பட உயரதிகாரிகள் உள்ளிட்டோர் குவிந்த வண்ணம் உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர் உடல் நலம் பெற வேண்டும் என அதிமுகவினர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கவர்னர் வித்யாசாகர்ராவ் தற்போது மும்பையில் இருந்து புறப்பட்டார். அவர் இரவு 10.30 மணி அளவில் சென்னை வருகிறார். முதல்வரின் உடல் நலம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விசாரித்தார்.
English Summary : Chief Minister Jeyalalitha, A sudden heart attack; Allow ICU.Chief Minister Jayalalithaa had a sudden heart attack. Subsequently, she was taken to the intensive care unit. However, Apollo Hospital said in a statement released today: Chief Minister Jayalalithaa, who is receiving treatment at the Apollo today (04.12.2016) evening, suffered a heart attack. she Cardiology treatment, medical experts are providing intensive care unit.