இடாநகர் : நாட்டின் மிகவும் இளம் வயது முதல்வர் என்ற பெருமை உடைய, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு(37) கட்சியிலிருந்து அதிரடியாக ‛சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட்:
அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டை அவரது கட்சியான அருணாச்சல் மக்கள் கட்சி அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அவரோடு துணை முதல்வர் சவ்னா மேயின் மற்றும் 5 எம்.எல்.ஏ.,க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
உத்தரவு:
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வதாகவும், அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கட்சியினர் பங்கேற்கக் கூடாது எனவும் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியின் தலைவர் காபா பென்ஜியா உத்தரவிட்டுள்ளார்.
தனி இடம் :
மேலும் தங்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சட்டசபையில் தனி இடம் ஒதுக்க வேண்டும் எனவும் மாநில சட்டசபை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் திருப்பங்கள்:
மொத்தம், 60 தொகுதிகள் உடைய அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு, பல்வேறு அரசியல் திருப்பங்களை சந்தித்த பின் சுப்ரீம் கோர்ட் தலையீட்டால் பெமா காண்டு, அம்மாநில முதல்வராக, கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். அருணாச்சல் மக்கள் கட்சி பா.ஜ., உடன் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Itanagar : The country is very proud of being the youngest Chief Minister of Arunachal Pradesh Chief Minister pema kantu (37), a party to the action from the 'suspended' was.