நியூயார்க் : தென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க கப்பல் உளவு பார்த்ததாக, புகார் கூறி வரும் சீனாவுக்கு, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனா எதிர்ப்பு :
ஆசிய நாடுகளில் ஒன்றான சீனா, தென் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இதற்கு, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன; அந்நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. அந்த கடல் பகுதியில், அமெரிக்க கப்பல் படை கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
குற்றச்சாட்டு :
அமெரிக்க கப்பலில், கடலுக்கடியில் இருந்து, ஆளில்லா, சிறிய ரக விமானத்தை, சீன கடற்படை படகு எடுத்துச் சென்றது; தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க கப்பல் உளவு பார்த்ததாக, சீனா குற்றம்சாட்டியுள்ளது. 'நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே, எடுத்துச் சென்ற, சிறிய ரக உளவு விமானத்தை திருப்பி தருவோம்' என, சீனா கூறியது.
கட்டாயம் இல்லை :
அமெரிக்காவின் புதிய அதிபராக, விரைவில் பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சீன கடற்படை எடுத்துச் சென்ற, அமெரிக்க கப்பலுக்கு சொந்தமான ஆளில்லா, சிறிய ரக விமானத்தை, சீனாவே வைத்துக் கொள்ளட்டும்; திருப்பி தர வேண்டாம். அந்நாட்டின் நிபந்தனையை ஏற்று, கருவியை திரும்பி வாங்க வேண்டிய கட்டாயம், அமெரிக்காவிற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary:
New York : US ship in the South China Sea area, to spying, who had complained to China, the US tycoon Donald Trump has a responsibility, condemned