சென்னை: உடல் நலக்குறைவால் காலமான மூத்த பத்திரிகையாளர் சோ மறைவுக்கு பிரதமர் மோடி, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிறந்த நண்பர்:
பிரதமர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி: சோ.ராமசாமி பன்முக தன்மை திறன் கொண்ட நண்பர். சிறந்த தேசப்பற்றாளர். எதற்கும் பயப்படாமல் குரல் கொடுக்கும் அவர் அனைவராலும் பாராட்டப்பட்டார். மரியாதைக்குரியவர். அனைத்திற்கும் மேலாக சோ ராமசாமி எனது நெருங்கிய நண்பர். சோ. ராமசாமி வெளிப்படை தன்மை கொண்டவர். அறிவாளி. அவரது மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்திற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் சோ. ராமசாமி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றது பற்றி குறிப்பிட்டுள்ள பிரதமர், அந்த நிகழ்ச்சிகளில் தனது பேச்சுக்கள் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
மூத்த உறுப்பினர்:
கவர்னர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட அறிக்கையில் பத்திரிகை உலகின் மூத்த உறுப்பினரையும், ஆளுமை திறன் மக்கவரையும் இழந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி:
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக் கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ- ராமசாமி அவர்கள் இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக் கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இழப்பு:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: கலை, பத்திரிகை, அரசியல் துறைகளில் தனது முத்தைரை பதித்தவர் சோ. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மீது பாசம்:
சோ.ராமசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியதாவது: நாடகம், சினிமா, பத்திரிகை என பல துறைகளில் சிறந்து விளங்கியவர் சோ. 4 நாட்களுக்கு முன்னர் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அரசியல் கருத்து வேறுபாடு இருந்தாலும் கருணாநிதி மீது பாசம் கொண்டவர் சோ என தெரிவித்தார்.
இழப்பு சாதாரணமானது அல்ல:
நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி.... ‛‛1978-லிருந்து எனக்கு நல்ல நண்பர் சோ. சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒருமுறையாவது அவரை சந்திப்பேன். பத்திரிகை துறையில் பெரிய ஜாம்பவான், அவர் பொய் சொல்லி நான் கேள்விப்பட்டது கிடையாது. அவரது நட்பு வட்டாரம் தமிழகம் மட்டுமல்ல டில்லி வரை வளர்ந்து கிடந்தது. மொராஜி தேசாய், வாஜ்பாயிலிருந்து இப்போது மோடி வரை அவருக்கு நன்கு பழக்கமானவர்கள். மிகப்பெரிய மனிதர், அவரது இழப்பு சாதாரணமானது அல்ல''.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
தைரியசாலி சோ:
சோவின் உடலுக்கு நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன்களும், நடிகருமான சூர்யா, கார்த்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், அவரைப்பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அரசியலிலும், ஆட்சி அதிகாரத்திலும் எந்த பதவி வகிக்காமலும், 50 ஆண்டுகள் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சோ அவர்கள். பாராட்டு போன்ற விஷயங்களை கேள்விப்பட்டாலே ஓடி ஒளிந்து கொள்வார். ஒரு சம்பவம் ஒன்றை சொல்கிறேன். ஒருநாள் மழையில் நானும், அவரும் நின்றிருந்தோம். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர், சார் நீங்களா... என்று கூறி காலில் விழுந்தார். உடனே சோவும் நீங்களா... என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். சரி என்று தோன்றினால் யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்பவர், அந்தளவுக்கு தைரியமானவர், யாருக்கும் அஞ்சாதவர். அதேசமயம் அவர் யாரையெல்லாம் விமர்சனம் செய்தாரோ அவர்கள் அனைவருமே இவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அவரிடத்தில் சென்ட்டிமென்ட் இருக்காது, கண்ணீர் விட மாட்டார் என்றார்.
English Summary:
Veteran journalist Cho died of an illness, the death of Prime Minister and DMK president M. Karunanidhi and condoled with celebrities. Governor Vidyasagar Rao came personally to pay homage.