வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார்.
இரண்டாவது இந்தியர்:
சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவரான பிரதீப் குப்தா என்பவர், தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்று கொண்டார். இதன் மூலம் மேயராக தேர்வாகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. குப்தா மேயராக தேர்வாவதற்கு முன்னர், இந்த தென் சான் பிரான்சிஸ்கோ நகர கவுன்சில் உறுப்பினராக, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 31ல் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2013 நவம்பரில் முழு உறுப்பினராக தேர்வானார். தென் சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் திட்டக்குழு உறுப்பினராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்த நகரத்தின் துணை மேயராகவும் குப்தா பணியாற்றியுள்ளார்.
பெருமை:
பிரதீப் குப்தா கூறுகையில், மேயராக தேர்வாகியுள்ளது பெருமையளிக்கிறது. நகரத்தின் முன்னாள் மேயர் மார்க் அடிகோ துவக்கிய பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கவுன்சிலில் பல குழுக்களை சேர்ந்த சிறந்த மக்கள் உள்ளனர். அவர்களில் நகரத்திற்கு பல ஆண்டுகள் சேவை செய்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
English Summary:
Washington: United States, South San Francisco, California, one of the mayor selected Indian descent.