பாரிஸ் - கணவரை கொன்றதற்காக பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை விடுதலை செய்யும்படி பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
கொடூரமாக கொலை:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜாக்குலின் சாவேஜ் என்ற பெண், பல ஆண்டுகளாக தன்னை அடித்தும், உதைத்தும், கொடூரத்தனமாக சித்ரவதை செய்துவந்த கணவரை கொன்று விட்டார். இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் அந்தப் பெண்ணுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட தங்களின் தாயாருக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை அளிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேவுக்கு ஜாக்குலின் சாவேஜின் மகள்கள் கருணை மனு அனுப்பி இருந்தனர்.
பொது மன்னிப்பு:
இதே கோரிக்கையுடன் ஆன்லைன் மூலம் பிரசார இயக்கமும் நடத்தப்பட்டது. இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 4 லட்சம் மக்கள் கையொப்பமிட்டிருந்தனர். இதனையடுத்து, நாட்டின் அதிபருக்குண்டான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஜாக்குலின் சாவேஜூக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அறிவித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
English summary:
Paris - have been sentenced to prison for ten years for killing her husband, to release pirankoyis Hollande as President of France granted a general amnesty.