சென்னை:
பாஜகவுக்கு கொள்கை ரீதியில் அதிமுக நெருக்கமாகவே இருக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார். ராஜாஜி அரங்கத்துக்கு வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த சசிகலாவின் தலையில் கை வைத்தும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவியும் ஆறுதல் கூறினார்.
அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட மோடியிடம் பேட்டி அளிக்கும்படி செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால், வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு மோடி சென்றுவிட்டார். அவருடன் வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுதல் கூறிய பிரதமர், 'மத்திய அரசு எந்த நேரத்திலும், எத்தகைய உதவியையும் தமிழகத்துக்கு செய்யத் தயாராக உள்ளது. எந்தப் பிரச்சினை வந்தாலும், தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும்' என்று உறுதியளித்தார்" என்றார்.
இதன் பின்னணி குறித்து கேட்டதற்கு, மத்திய அரசின் அணுகுமுறையையே இது காட்டுகிறது; பாஜகவுக்கு கொள்கை ரீதியில் அதிமுக நெருக்கமானதாகவே இருக்கிறது என்கிற ரீதியில் வெங்கய்ய நாயுடு விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது பாஜக காட்டிய முனைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, "அதிமுகவுடன் எப்போதுமே நல்லுறவு இருக்கிறது" என்றார் அவர்.
English summary:
It is close to the BJP and AIADMK in principle that the party's leader and Union Minister Venkaiah Naidu said, the State has attracted attention in the political arena. Prime Minister Narendra Modi came to pay homage to Jayalalithaa in Chennai on Tuesday. Jayalalithaa arrived on the scene, even paid homage to the body. Placing hands on the head of the Sasikala, Chief O.panneerselvam consoled with a hug.