புதுடில்லி : நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு ஜன.,13ம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் கால அவசாகம் அளித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஊழல் :
கடந்த 2006 முதல் 2008ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த மது கோடா, மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், காங்., மூத்த தலைவரும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என சி.பி.ஐ., குற்றம் சாட்டியது. இவ்வழக்கில், ஜிண்டால், முன்னாள் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜன., 13ம் தேதி வரை :
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று(டிச.,20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கால அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ., கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஜன., 13ம் தேதி வரை கால அவகாசம் அளித்து அனுமதியளித்தது.
English Summary:
Coal mining scam: CBI to file report on the investigation, the Mat., On the 13th until the court has time-bound inquiry.