பெர்லின் - ஜெர்மனி வாகன தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
ஐ.எஸ் பொறுபேற்பு:
இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஒரே நபரையும் பாதுகாப்பு படை விடுவித்தது. 23 வயதான அந்த இளைஞர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்.ஜெர்மனியில் அகதியாக தங்கியிருந்த நிலையில், அவரை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்த போலீஸ் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்தது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடிக்கும் வரை ஓயமாட்டோம் என்று ஜெர்மனி உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
சந்தைககுள் தாக்குதல்:
ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை இயங்கி வந்தது. இந்த சந்தையில் பொதுமக்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் உள்ளூர் நேரப்படி இரவு 8.14 மணிக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு உருக்கு உத்திரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சீறிப்பாய்ந்து ஆட்கள் மீது ஏற்றி சுமார் 80 மீட்டர் தொலைவுக்கு சென்று நின்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. லாரி சக்கரங்களுக்கு இடையே சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். பலர் சக்கரத்துடனே இழுத்துச் செல்லப்பட்டனர்.
12 பேர் நசுங்கி பலி:
இந்த கோர சம்பவத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை, அவர்கள் மீட்டு, ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரியின் டிரைவர் சம்பவ இடத்தில் லாரியை விட்டு விட்டு, அந்த பகுதியில் அமைந்திருந்த டையர்கார்டன் என்ற பூங்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்.சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி, போலந்து நாட்டின் ஏரியல் ஜூராவ்ஸ்கை என்பவருக்கு சொந்தமானது, போலந்து நாட்டில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary:
Berlin - Germany ISIS terrorist organization claimed responsibility for the attack vehicle. Intense police hunt for the person who carried out the attack to catch.